திருப்பத்தூர் நகரில் நாள்தோறும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திமுக நிர்வாகி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியாது அளவுக்கு பாதுகாப்பு பணிகள் காவல்துறை ஈடுபடுத்தபட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் தலைநகரான திருப்பத்தூர் நகரில் பொதுமக்கள் வெளியே வரமுடியாத ஒரு சுழல் நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் , மாற்று திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என சுமார் 200 பேருக்கு நாள்தோறும் முன்னாள் சேர்மேன் அண்ணாதுரைநினைவு அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளரும் திமுக மாவட்ட பொருளாளருமான அண்ணாஅருணகிரி தானே நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...