வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.. உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்சார்லி சாப்ளின் அவர்களின் பிறந்த தினம் இன்று...


வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..
உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்சார்லி சாப்ளின் அவர்களின் பிறந்த தினம் இன்று...


சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர்.


இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.


உலகம் அறிந்த பெயர்கள் பட்டியலில் சார்லி சாப்ளினுக்கு தனி இடம் உண்டு. இவர் ஒரு காமெடியன் மட்டும் இல்லை


*மிகுந்த சமூக அக்கறையுடன் அவர் கலையை அணுகி வந்தவர்.*


இதுவே அவரை மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபடுத்தியது. 


சாப்ளின் உலக சினிமாவின் அடையாளமாக சொல்லப்படுகிறார்.


*உண்மையில் அவர் யதார்த்த வாழ்வின் ஆன்மா.*


புன்னகை என்னும் கலையில் நீடித்து வாழும் பொக்கிஷம்.


துன்பம் வரும் வேளையில் சாப்ளினோடு பேசுங்கள்.


நிச்சயம் ஆறுதல் தருவார்.


*ஒரு திரைப்படத்தில் ஹிட்லராக நடித்து அந்த ஹிட்லரையே சிரிக்க வைத்தவரல்லவா அவர்!*


உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஆக்கம் தரும் படைப்புகளும், ஊக்கம் தரும் செயல்களும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.


*அவர்களுடைய சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்; நினைவுகள் எப்போதும் துளிர்த்துக் கொண்டிருக்கும்.*


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.



தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image