வாணியம்பாடியில் துப்புரவு பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த அமைச்சர் நிலோபர் கபில்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ள தனியார் கல்லூரி மற்றும் திருமண மண்டபத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் நேரில் சென்று உணவு பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பின்னர் ஆலங்காயம் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினி சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார் மேலும் கொறனோ தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து துப்புரவு பணியாளர்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என இருகரம் கூப்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆலங்கயம் வட்டார பசுபதி மருத்துவர் வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம்
ஆலங்காயம் பேரூராட்சி அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன். அரவிந்தன்..