திருப்பத்தூரில் கூட்டணி கட்சி நிர்வாகி கடையில்  கடப்பா கல்லை ஆட்டைய போட்ட  திமுக பிரமுகர்..

திருப்பத்தூரில்  கூட்டணி கட்சி நிர்வாகி கடையில்  கடப்பா கல்லை ஆட்டைய போட்ட  திமுக பிரமுகர்..


கடந்த வாரம் சமூக வலைத்தளமான ட்விட்டர், பேஸ்புக்,  வாட்ஸ்அப் என பரவிய செய்தி கடப்பாக்கல் திருட்டு பற்றிய வீடியோ தான். அந்த திருட்டில் ஈடுபட்டது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியின் கடையின் கடப்பா கல்லை  திருடியது  தற்போது விசாரணையில்  தெரியவந்து  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் நகரம்  27 வார்டு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் எஸ்.கிருஷ்ணன் என்பவர்.  இவர்  திமுக கட்சியில் திருப்பத்தூர் 27வது வார்டு பிரதிநிதியாகவும் இவர் அதே பகுதியில் கோழி கடை வைத்துள்ளார். இவர் கடந்த வாரம்  தனது இருசக்கர வாகனத்தில்  உறவினர் ஒருவரை  அழைத்து கொண்டு இரவு நேரத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தங்கியுள்ள  புதுப்பேட்டை சாலை பங்களாவுக்கு எதிரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பிரமுகர் ஒருவரின் கடையின் முன்பு வாடிக்கையாளர்கள் அமர வைக்கப்பட்டிருந்த கடப்பா கல்லை தான்   திருடி சென்றுள்ளார். அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் கடப்பாகல் திருடிய திமுக என இரண்டாமிடத்தில் ட்ரெண்டிங் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி  திமுகவிற்கும் மக்கள் மத்தியில்   பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது.  குறிப்பாக மாவட்ட ஆட்சியர் தங்கும் விடுதிக்கு  எப்போதும் காவல்துறை பாதுகாக்கும் இருக்கும். அப்படி பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கே டிமிக்கி கொடுத்து ஒரு கடப்பா கல்லை  திருடி உலக அளவில் கடப்பா கல்லை திருடிய திமுக என ட்ரெண்டாக்கியவர் நம்ம  திமுக பிரமுகர் ஆவார்..   தங்கள் கட்சி கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகியின் கடையிலேயே திருடிய சம்பவம் திமுக கூட்டணி கட்சி நிர்வாகி மத்தியில் பெரும் அவப் பெயரையும் பெரும் அச்சத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழமொழி...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image