வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..
இந்தியாவின் முன்னாள் இராணுவ கமான்டர் உயர்திரு பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா பிறந்த தினம் இன்று ...
தனது 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர்.
இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர்.
இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது.
பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர்.
வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவு கூறப்படுபவர்.
இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார்.
அவரைப் போல் நீதி நேர்மையுடனும் நியாயமாகவும் நடந்துகொண்ட ராணுவ அதிகாரி கிடைப்பது அரிது.
*அந்த மாமனிதருக்கு ஒரு ராயல் சல்யூட்.*
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரில்..