வாணியம்பாடி மீனவ சமூகம் சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் ஸ்ரீ பருவதராஜ குல மீனவ சமூகம் சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு கடந்த 8 நாட்களாக சமூக இடைவெளி கடைப்பிடித்து நாள் ஒன்றுக்கு தலா ரூ.1100 மதிப்பிலான உணவு பொருட்களை நூறு பேருக்கும், 500 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் ஸ்ரீ பருவதராஜ குல மீனவ சமுதாய தலைவர் வீ.ஸ்ரீதர் வழங்கினார். உடன் சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில், சி.மகேந்திரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தினகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...