வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்.. சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜகன்னாதன் பிறந்த தினம் இன்று...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...
தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்.. சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜகன்னாதன் பிறந்த தினம் இன்று...


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் (1906) பிறந்தார்.


இளம் வயதிலேயே திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி உள்ளிட்டவற்றை மனப்பாடமாகக் கூறுவார்.


எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிதம்பரம் நடராஜர் மீது ‘போற்றிப் பத்து’ என்ற பதிகத்தை 14-ம் வயதில் எழுதினார்.


முருகன் மீதும் பல பாடல்கள் எழுதினார். ‘ஜோதி’ என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதை கள் பிரபல இதழ்களில் வெளியாகின.


காந்திஜியால் கவரப்பட்டவர், ராட்டையில் நூல் நூற்று கதர் ஆடைகளை அணிந்தார்.


சென்னையில் உ.வே.சா.வுடன் தங்கி, குருகுல முறையில் தமிழ் பயின்றார். அவரது தமிழ்ப் பணிக்கு உதவுவதையே தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றார்.


அவரது அன்புக்குப் பாத்திரமாகி, அவரது உதவியாளராகவும் செயல்பட்டார்.


இலக்கண, இலக்கிய, சங்ககால நூல்கள், காப்பியங்கள், பிரபந்தங்கள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். ‘வித்வான்’ தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார்.


1932-ல் கலைமகள் இலக்கிய இதழில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார்.


தன் எழுத்தாற்றல், உழைப்பால் அதன் ஆசிரியராக உயர்ந்தார். இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தினார்.
தனது பேச்சாற்றல், சிலேடைப் பேச்சால் கி.வா.ஜ அனைவரையும் வசீகரித்தார்.


இவை பல நூல்களாகவும் வெளிவந்தன.


நாடோடிப் பாடல்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். பல கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டு, குறிப்பெடுத்தார். அவற்றைத் தொகுத்து, நூலாக வெளியிட்டார்.


சிறுகதைகளும் எழுதினார். திருக்குறள், திருவெம்பாவை, திருப்புகழ், பெரியபுராணம் நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார்.


ஏராளமான பரிசுகள், விருதுகளைப் பெற்றார். இவரது ‘வீரர் உலகம்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.


*வாகீச கலாநிதி, செந்தமிழ்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் பெற்றார். திறனாய்வாளர், உரையாசிரியர், கவிஞர், பதிப்பாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட கி.வா.ஜ. 82ஆவது வயதில் (1988) காலமானார்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image