திருப்பத்தூர் நகரில் கொரோனா வைரஸ் பற்றி  ஓவியம்  வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை....

திருப்பத்தூர் நகரில் கொரோனா வைரஸ் பற்றி  ஓவியம்  வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை....


சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் தனது அசுர பலத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்ற நோக்கில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் கொரோனாவின் தாக்கம் தெரியாமல் வெளியில் சுற்றி திரியும் அவலநிலை தொடர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் நகரில் புதுப்பேட்டை சாலையில் திருப்பத்தூர் மாவட்ட ஸ்டிக்கர் தொழிலாளிகள் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து உள்ளனர். இந்த ஓவியம் அவ்வழியாக செல்லும்  காண்போரை வெகுவாக கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image