திருப்போரூர் ஒன்றியதிற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்- முன்னாள் அதிமுக  காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் தண்டரை கே.மனோகரன் வழங்கினார்...

திருப்போரூர் ஒன்றியதிற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்- முன்னாள் அதிமுக  காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் தண்டரை கே.மனோகரன் வழங்கினார்...


சமீபத்தில் கொரோனா வைரஸ் என்ற அரக்கன், சீனாவின் யுகான் மாகாணத்திலிருந்து பரவி, 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை தாக்கிய நிலையில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸினால் தாக்கப்பட்டு மக்கள் கொத்து கொத்தாக மடிவது நம்மை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்திய துணை கண்டத்தையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. விரைந்து செயல்பட்ட மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதிலும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கு என்பது ஜம்மு, காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களுக்கு புதிதல்ல. அங்கு வாழும் மக்கள் இதற்கு பழக்கப்பட்டவர்கள். ஆனால் தமிழக மக்கள் இச்சட்டம் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அதனால் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழக மக்கள் செய்வதறியாது திகைத்தனர். நாட்டு மக்களுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்குத்தான் இந்த ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்பட்டதேயன்றி யாரையும் துன்புறுத்தவோ மிரட்டவோ அல்ல. இதை உணராத மக்கள் அரசு உத்தரவை அலட்சியப்படுத்தி ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு தெருக்களில் சுற்றி வருகின்றனர்.தமிழக முதல்வரின் உத்தரவின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் காவல்துறையினரும் அயராது இரவும் பகலும் பணியாற்றி சமூக தொற்று ஏற்படாமல் கண்காணித்தனர். இவர்களின் இந்த சீரிய பணியால் நாம் வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டோம். நம் மாநிலத்தில் சில எண்ணிக்கையிலான வைரஸ் தொற்றும் மக்களால் ஏற்பட்டவைதான். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் நடவடிக்கைகளால் நாம் உயிர் பிழைத்தோம்.
இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தமிழக மக்கள்  குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள், நடைபாதை வியாபாரிகள், சிறு குறு வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட பல தரப்பினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். "ஊரடங்கு உத்திரவு சரி, அன்றாடங் காய்ச்சிகளுக்கு என்ன வழி? தினசரி உணவு வழங்க ஏதேனும் ஏற்பாடு உண்டா? வியாபரங்கள் மூடல் சரி, அதனை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை என்னாாவது? அதற்கு என்ன பரிகாரம், கொரோனா தாக்குதலையும் சேர்த்து இந்த தாக்குதலையும் எப்படி சமாளிப்பான் சாமான்யன்?" என்று அரசியலை மட்டுமே தொழிலாக கொண்ட பல்வேறு கட்சியினர் முழக்கமிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ஐந்தாயிரம் வழங்க வேண்டும்,
பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூக்குரல் இட்டனர். ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நன்கு அறிந்திருந்த தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் வகையில் போதும் போதும் என்றளவிற்கு உணவளித்தது. அது மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் அஇஅதிமுக சார்பில் உணவிற்காக வாடிய மக்களுக்கு உணவளிக்கப்பட்டது.குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இப்பணி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளரும் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தண்டரை கே.மனோகரன்  நிகழ்த்திய அற்புதம் இது. அவர் முதல் கட்டமாக கடந்த வாரம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.தண்டரை கே.மனோகரன் ஏற்பாட்டில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் முன்னாள் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.கே.எம்.சின்னையா கலந்து கொண்டு  பேரூராட்சி பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள், முக கவசங்கள், கிருமிநாசினி வழங்கி பணியாளர்களுக்கு சால்வை அனிவித்து கௌரவித்தனர். 


இதனையடுத்து தண்டரை மற்றும் பெரிய இரும்பேடு ஊராட்சியிலுள்ள  ஏழை எளிய மக்கள் தினக்கூலி தொழிலாளர்கள் எனவும் ஊரடங்கால் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து 


இதை கேள்விப்பட்டு மிகவும் வேதனையடைந்த தண்டரை கே.மனோகரன்  தண்டரை ஊராட்சி மற்றும் பெரிய இரும்பேடு ஊராட்சிகளிலுள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 500 பேருக்கு வீட்டிற்கே சென்று சமூக இடைவெளி விட்டு அரிசி மற்றும் உதவிகளை வழங்கினார்.


 இதனால் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள் இரு கரம் கூப்பி அவரை வணங்கி நன்றி தெரிவித்தனர்.  இதைப் பார்த்த பொழுது ஒரு திருக்குறள் ஞாபகம் வந்தது. 


"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள"


இதன் பொருளானது, ஒருவன் வந்து, ‘நான் யாதும் இல்லாதவன்’ என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க செயல்பட்டு வரும் தண்டரை கே.மனோகரன் பல்லாண்டு காலம் நீடிய புகழோடு வாழ இம்மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிகழ்வின்போது முன்னாள் கவுன்சிலர் இராமகிருஷ்ணன், முருகவேல், தி.க.குன்றம் செல்வம், ஏசுபாதம், சிகாமணி, மாணிக்கம், காமராஜ், இளங்கோ, கோவிந்தராஜ், வீராசாமி, வேதகிரி, ரமேஷ், சண்முகம், ராமசாமி, மகேஸ்வரி, குப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image