திருப்பத்தூரில் பெண்களுக்கு உதவி கரம் நீட்டிய தனியார் தொண்டு நிறுவனம்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலிருந்து நகரத்தை தேடி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள காலணி தயாரிப்பு நிறுவனங்களின் விதவை பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணி இல்லாமல் வாடகை வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் திருப்பத்தூர் பகுதியில் இயக்கும் சேஞ்ச் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் சரஸ்வதி தலைமையில் 100 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான
அரிசி, பருப்பு, எண்ணை, சோப்பு மற்றும் முக கவசங்கள், கிருமி நாசினி, கையுறைகள் போன்ற ஆகிய பொருட்கள் அடங்கிய உணவு பொருட்களை வழங்கினார்.. மேலும் பொதுமக்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...