குற்றம் கூறிக்கொண்டே இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி செயலாற்றி வருகின்றார்..
விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி ...
குற்றம் கூறிக்கொண்டே இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி செயலாற்றி வருகின்றார் என்று விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
கொரோனா தடைகாலம் உள்ள மே 3ந் தேதி வரை 11 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகத்திலும் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க விருதுநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி சார்பாக ரூபாய் 8 லட்சத்து 60 ஆயிரத்தை வி௫துநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், தொழிலதிபர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு எடப்பாடியார் அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வும் தான் காரணம். மருத்துவர்கள் இறைவனின் தொண்டர்கள் என முதல்வர் கூறியுள்ளார். மருத்துவர்கள் உயிரிழந்தால் 10 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். அரசு அதிகாரிகள் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பில் அரசி்ன் நடவடிக்கையை நடுநிலையாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்ல கூடாது. குறைகளை மட்டுமே கூறிக்கொண்டே இருந்தால் நிறைகள் கண்ணுக்கு தெரியாது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை .அந்த அளவு மக்களை தமிழக அரசு பார்த்துக் கொள்கிறது. வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி வருகிறார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அச்சப்படும் அளவிற்கு வெளிப்படையான நிர்வாகத்தை எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது. அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆர்வத்தோடு பணியாற்றிய காரணத்தினால் மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள். அனைவரையும் மதிக்கின்ற நாடு தமிழ்நாடு. குற்றம் கூறிக்கொண்டே இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி செயலாற்றி வருகின்றார் என்று கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடர் காலை நாளிதழ் ...