வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.. நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் பிறந்த தினம் இன்று...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..
நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் பிறந்த தினம் இன்று...


தமிழகத்தின்  முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர்.


இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம்  ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்


இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.


கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் நீல. பத்மநாபன். அங்கேயே வசித்தும் வருகிறார்.


கேரளத்தில் பிறந்து, நவீன தமிழ் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியில் பெறும் பங்காற்றியவர் நீல. பத்மநாபன்.
எழுத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த பத்மநாபன், சிறு வயது முதலே தமிழ் எழுத்தில் மிகத் தீவிரப் பற்று கொண்டவர்.


இதுவரை தமிழில் 34 நாவல்களையும், மலையாளத்தில் 4 மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியுள்ளார் நீல.பத்மநாபன்.


கேரள பல்கலைக்கழக போர்ட் ஆப் ஸ்டடிஸின் உறுப்பினராகவும், சாகித்ய அகாடமி செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ள நீல. பத்மநாபன், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் இவரது நூல்கள் பல மொழியாக்கம் செய்யப்பட்ட பெருமைக்குரியவை.
பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், உதயதாரகை, பகவதி கோவில் தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட நாவல்கள் நீல. பத்மநாபனின் எழுத்துச் செழுமைக்கு சிறந்த சான்றுகள்.


*இவரது நீல.பத்மநாபன் கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்ற கவிதைத் தொகுப்பாகும்.*


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image