வேலூர் பாகாயம் பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் இருக்கும் கழிவுநீர் குட்டை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தற்போது அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அஃதே போன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் நிலைமை இப்படி இருக்க. வேலூர் அடுத்த பாகாயம் மலையரடிவாரம் உள்ள வளர்நகர் பகுதியில் தனிநபர் ஒருவர் தனது வீட்டில் பயன்படுத்தும் கழிவறையின் கழிவுகளை அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மனித கழிவுகளை கலந்து விடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மனவேதனை அடைந்து வருகின்றனர். தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் வளர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பதட்டத்துடன் தினந்தோறும் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதிகளை தூய்மை செய்து நோய் தொற்று அபாயம் ஏற்படாத வகையில் தூய்மைப் பணியில் ஈடுபடவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாகும். அதே போல் அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் தனது சுயநலத்திற்காக அப்பகுதியில் உள்ள பொது மக்களின் சுகாதாரத்திலும் அவர்களின் உயிரிலும் விளையாட்டும் நபரின் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி. சரவணன்...