கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியப்போட்டிகள் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு வாங்க பரிசை வெல்க...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் வீட்டினுள் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பத்தூர் காவல்துறையும்-கொரோனா தடுப்பும் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடைப்பெற உள்ளது.*
*இந்த போட்டியானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு குழுக்களாகவும்.ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் என இரண்டு குழுக்களாக என இரண்டு பிரிவுகளாக பிரித்து ஓவியப்போட்டிகள் நடைப்பெற உள்ளது.*
*இந்த ஓவிய போட்டியில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தடுப்பு குறித்தும் தொற்று நோய் பரவாமலிருக்க மாவட்ட காவல்துறை சார்பில் எவ்விதமான முன்னெச்சரிக்கை தடுப்பு நடைவடிக்கள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதை பொதுமக்கள் பின்பற்றினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பின்பற்றவில்லை எனில் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஓவியம் இருக்க வேண்டும்.*
*ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் தங்களின் ஓவியத்தை வரைந்து தங்களின் முகவரி கொண்டு மாவட்ட காவல்துறை whatsapp no.9442992526 அல்லது tptdtcontrol@gmail.com என்ற முகவரிக்கு 09.04.2020 அன்று மாலை 6மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.*
*இந்த ஓவிய போட்டியில் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கும் இருபிரிவிலும் தலா ஒரு மாணாக்கர் வரைந்த ஓவியத்திற்கு முதல் பரிசு.5000ரூபாய் அளிக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...