திருப்பத்தூர் நகர பாஜக சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய நிர்வாகிகள்.
மூன்றாம் உலகப்போர் எந்த வகையில் வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் திடீரென சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்பொழுது அகில உலகத்தையும் ரத்தமின்றி யுத்தம் செய்து வருகிறது.. இதை கட்டுப்படுத்த நமது பாரத தேசமான இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்து வருகிறது.. இதற்காக இந்தியா முழுவதும் முழு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.இதனால் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என தாமாக முன்வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் 36வது வார்டு பாரதிதாசன் நகரில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வாசுதேவன், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்கறி, அரிசி, மளிகைப் பொருட்கள், முக கவசம், கிருமிநாசினி போன்ற தொகுப்பினை வழங்கினர். இதில் நகர தலைவர் அருள்மொழி, மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன், பொதுச் செயலர் கண்ணன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள் - கோவி.சரவணன்...