வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..இன்று சர்வ தேச தெருக் குழந்தைகள் தினம்...
தெருக் குழந்தைகள் என்பது பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டலுக்குப் பொறுப்பான பெரியோர்கள் யாருமில்லாமல், தெருவோரங்களை வாழும் இடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள குழந்தைகளைக் குறிக்கிறது._*
தெருக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதில்லை.
அதற்குப் பதிலாக, தெருக்களில் பொருட்களை விற்பனை செய்வது அல்லது வேறு சிறுசிறு வேலைகள் செய்து பொருள் ஈட்டுகின்றனர்.
தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
பெற்றோர்களுக்கு கிடைக்கும் குறைவான வருமானமும், வேலையே கிடைக்காமல் அல்லது வேலைக்கே போகாமல் வாழ்கின்ற குடும்பச் சூழலும் இத்தகைய தெருவோரக் குழந்தைகளை உருவாக்குகின்றன.
இந்தியாவில் மட்டும் 8,00,000 குழந்தைகளுக்கு மேல் தெருவோரக் குழந்தைகளாக வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
மக்கள்தொகை பெருகி வருவது போலவே தெருவோரக் குழந்தைகளின் தொகையும் நாளுக்குநாள் பெருகி வருகிறது.
தெருக்குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இளம் வயதிலேயே இறந்து விடுகின்றனர்.
முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
கிட்டத்தட்ட 1,10,000 குழந்தைகள் ஆண்டுதோறும் பல்வேறு நோய்களால் இறந்து போகின்றனர்.
சில நேரங்களில் பசியாலும், சுகாதரமான உணவு கிடைக்காததாலும், சத்துள்ள உணவை வாங்கும் திறனற்று இருப்பதாலும் இவர்கள் இறந்து போகின்றனர்.
இவர்களுக்கு முறையான கல்வியறிவு அளிக்கப்பட்டால் இவர்களது வாழ்விலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
*அவர்களுக்கு கல்வி அளிப்பது மிகவும் முக்கியம் என்பது உணரப்பட்டு அரசு சாராத சில தொண்டு நிறுவனங்கள் இதற்காக முயன்று வருகின்றன. நாமும் நமது உதவி கரங்களை நீட்டி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்....
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை காண்க...