வாணியம்பாடியில் தனியார் கல்லூரி மற்றும் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வர்கள் வீடு திரும்பினர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 52நபர்களை தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி மற்றும் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு உரிய முறையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதன்பேரில் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் 52 நபர்கள் தங்கள் வீட்டில் தங்களைத்தானே தனிமைபடுத்தி கொள்ள அறிவுரை வழங்கி வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர். நிலோபர் கபில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்,வட்டார மருத்துவ அலுவலர்,நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்....