திருப்பத்தூர் அருகே திமுக சார்பில் கொரோனா நிவாரணம்...
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிரமங்கலம் ஊராட்சியில் சுமார் 600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்துகொண்டு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட செயலாளர் தேவராஜ், முன்னாள் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்..