திருப்போரூரில் அதிமுக முன்னாள் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் தண்டரை கே.மனோகரன் ஏற்பாட்டில் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளார்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வழங்கினார்..
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஇஅதிமுக மாநில தலைமை இணை ஒருங்கிணைப்பாளாரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளாரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ஆகியோர்களின் ஆணைக்கிணைங்க தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையால் பிறபிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் இக்கட்சியினர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளார்கள் மற்றும் தண்டலத்
தில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு முன்னாள் அஇஅதிமுக காஞ்சி மத்திய மாவட்ட செயலாளாரும், முன்னாள் திருப்போரூா் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தண்டரை கே.மனோகரன் ஏற்பாட்டில் முன்னாள் கால்நடை பாராமாிப்புத்துறை அமைச்சரும் முன்னாள் அஇஅதிமுக கட்சியின் காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளாருமான டி.கே.எம். சின்னையா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முதலாவதாக திருப்போரூா் பேரூராட்சியில் சமூக இடைவெளியுடன் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நின்று இருந்த தூய்மை பணியாளார்களுக்கு கபசுர நீரும் அடுத்ததாக நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் டி.கே.எம் .சின்னையா மற்றும் முன்னாள் திருப்போரூா் எம்.எல்.ஏ.தண்டரை கே.மனோகரன் இணைந்து வழங்கினார்கள்.
பின்பு இரவு பகல் பாராமல் வரும் நோயையும் பொருட்படுத்தாமல் மக்களின் தூய்மையை முக்கியம் எனகருதி இந்த சூழ்நிலையிலும் அன்றாடம் உழைத்து வரும் தூய்மை பணியாளார்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். அதனைத் தொடா்ந்து தங்களை தேடிவந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கெளரவித்தமைக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தூய்மைபணியாளா்கள் கூறினாா்கள்.
திருப்போரூா் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூக கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு கையுறை மற்றும் கபசுரநீர் பவுடரை தண்டரை கே.மனோகரன் செயல் அலுவலர் சதீஷ்குமாாிடம் வழங்கினார்.
அதேப்போல் திருப்போரூா் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கும் காவல்நிலைய ஆய்வாளர் இராஜேந்திரனிடம் திருப்போரூா் ரவுண்டானவில் நேரில் சந்தித்து வழங்கினாா் .
இறுதியாக தண்டலம் ஊராட்சியிலுள்ள குளக்கரையில் வசித்துவரும் நரிக்குற இனமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று 50 கிலோ அரிசி 10 கிலோ எடைகொண்ட காய்கறிகளை நலத்திட்ட உதவிகளாக இருவரும் இணைந்து வழங்கினாா்கள். பேரூராட்சியில் பணிபுரியும் 75 தூய்மைபணியாளார்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி, முக கவசம், கிருமி நாசினி மருந்து , பாதுகாப்பு கையுறைகள் , கப சுரநீர் , தக்காளி ,வெங்காயம் ,கத்திாிக்காய் ,உருளைக்கிழக்கிழங்கு ஆகியவைகள் நலத்திட்ட உதவியாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது திருப்போரூா் பேரூராட்சியின் அஇஅதிமுக நகரச்செயலாளார் ஜி.முத்து , முன்னாள் வாா்டு உறுப்பினர்கள் லவன் ராமகிரூஷ்ணன், கணேசன், மற்றும் முருகவேல், கோயாட்டிபாய், இளங்கோவன், லோகேஷ், செல்வம் கண்ணதாசன் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள். ரூபாய் 80,000மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அஇஅதிமுக முன்னாள் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளாரும் , முன்னாள் திருப்போரூா் சட்ட மன்ற உறுப்பினருமான தண்டரை.கே.மனோகரன் ஏற்பாடு செய்திருந்தாா்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்...