ஒரு லட்சம் மதிப்பிலான முக கவசம் மற்றும் கையுறை அடங்கிய தொகுப்பினை தூய்மை காப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கி திருப்பத்தூர் எம்எல்ஏ....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரங்களை இழந்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் ஒரு மாத ஊதியத் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வங்கி காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எம்எல்ஏ நல்லதம்பி மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் வழங்கினார். அதன்பின் தனது தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஒன்றியங்களில் உள்ள 54 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 650 தூய்மை காப்பாளர்கள் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி வார்டு வாரியாக வீடு வீடாக தொற்றுநோய் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் 160 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் தன்னார்வலர்கள் மற்றும் காவலர்களுக்கும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தன் சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான 1400 முகக் கவசங்கள், கையுறைகள், அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்....