ஆம்பூர் அருகே மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய அதிகாரிகள்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி ஊராட்சியில் உள்ள பெரியூர் , சீக்கஜொனை , நடுவூர் , சோளக்கொல்லை மேடு, பனங்காட்டேரி , பூதக்கொல்லை என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மலை வாழ் மக்கள் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழுத்து நிற்க்கும் இவர்களுக்கு உதவும் வகையில் வனத்துறை சார்பிலும் மற்றும் ஆம்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கொரோனா நிவாரணமாக அரிசி, மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆம்பூர் நீதிமன்ற நீதிபதி கனிமொழி தலைமையில் வழங்கபட்டது. இதில் ஆம்பூர் வனசரகர் மூர்த்தி , வனவர் சத்தீஷ் , வனக்காப்பாளர்கள் சௌந்தரராஜன், செந்தில் , நிர்மல் ,
நல்லத்தம்பி , நடராஜன் மற்றும் வனக்காவலர்கள், வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் , நாய்க்கனேரி ஊராட்சி செயலாளர் இராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...