ஆம்பூர் அருகே மலைவாழ் மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கிய ராணுவ வீரர்கள்.

ஆம்பூர் அருகே மலைவாழ் மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கிய ராணுவ வீரர்கள்.



ஆம்பூர் அருகே உள்ளது வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பள்ளி கிராமம்.இந்த கிராமம் மற்றும் அருகே உள்ள ராள்ளக்கொத்தூர் கிராமங்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த இருளர் இன குடும்பங்கள் உள்ளன.


நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இந்த மலை வாழ் மக்கள் அன்றாட தேவைகளுக்கு இப்போது அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அறிந்த
ஆம்பூர் ஜவான்ஸ்(Ambur jawans) குழுவினர் மற்றும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்களும் ஒன்றிணைந்து ஆம்பூர் பகுதியில் உள்ள இந்த மலை வாழ் மக்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.இந்த இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மௌலி குமார்(ஏ) திவாகரன் (தேவலாபுரம்) ,ஜனா (காரப்பட்டு) ,தினேஷ் (தேவலாபுரம் ),ராம்குமார் (நாச்சியார் குப்பம் ),கோகுல் (ஆம்பூர்),நவீன்  (கதவாளம்),


மற்றும் பல நண்பர்கள் கலந்து கொண்டனர்.ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 50 ராணுவ வீரர்கள் இந்த குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்..


 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image