திருப்போரூா் அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி திருக்கோவிலில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கிய லத்தூர் சிறுவங்குணம் மு.சங்கர்-
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வள்ளி தெய்வானை திருக்கோவிலைச் சுற்றியுள்ள ஆதரவற்றோா்களுக்கு திருப்போரூரில் இயங்கிவரும் திருப்போரூா் உதவும் கரங்கள் குழுவினருடன் இணைந்து லத்தூர் ஒனறியத்திற்குட்பட்ட சிறுவங்குணம் ஊராட்சியில் வசித்துவரும் சங்கர் சுமாா் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமாக சாம்பாா் சாதம், தண்ணீா் பாட்டில், வாழைப்பழம் வழங்கினார். இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளார் சமூகஆர்வலர் வி.அபில்ராஜ் மற்றும் ஆர்.ஜெகதீஸ்வரன் குழுவினர்கள் உடனிருந்தனர்கள். இன்று 23 வது நாளாக தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- உத்தமன்...