வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..
நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்...
*உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம்*
சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது.
உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது.
முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது
'நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites)', ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைத் தன்மைகளின் தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளின் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
*1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, 'நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான நாள்' என அறிவிப்பது பற்றிக் கலந்தாய்வு செய்யும்படி அதன் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...