செங்கல்பட்டில் கொரோனா நிவாரண நிதிக்காக தனது சேமிப்பு பணத்தை அள்ளி கொடுத்த சிறுமி..
தமிழ் நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரின் அருகில் உள்ள மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் ஆகும். குறிப்பாக கொரோனா வைரஸ் அதிகம்பாதிக்கப்பட்ட ரெட் மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்டமும் உள்ளது. கொரோனா நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர், சமூக ஆர்வலர்களுக்கு கோரிக்கை வைத்தார். அதன் பேரில் பல பேர்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், சண்முகபிரியா தம்பதியரின் குழந்தை செல்வி ஆர்.எஸ்.ஆதினி பள்ளியில் யூ.கே.ஜி சேர்வதற்கு தான் சேமித்து வைத்திருந்த தொகையான 16,260 ரூபாயை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் வழங்கினார். அப்போது உடன் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்- கோவி.சரவணன்...