நாள்தோறும் காவலர், தூய்மை பணியாளர்கள், முதியோர்களுக்கு உணவு வழங்கும் பாமக நிர்வாகிகள்...
சீனாவில் தொடங்கி இன்று அண்டசராசரத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸின் தாக்கம் வல்லரசு நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.. வல்லரசு நாடு என கூறிக்கொள்ளும் அமெரிக்காவிலும் இந்த கொடிய வைரசால் நாள்தோறும் உயிர் பலி வாங்கி வருகிறது.. உலகத்தில் மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 மண்டலங்களாக பிரித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதில் புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உள்ளது.. இந்த கொடிய வைரஸை எதிர்கொள்ளும் பணியில் காவல்துறை, மருத்துவத்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறைகளும் களத்தில் இறங்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இப்படி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு உதவும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாள்தோறும் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, கபசுர குடிநீர், முக கவசங்கள், கிருமி நாசினி உட்பட கொரோனா தடுப்பு உபகரணங்களை 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றிய தலைவர் மாது, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், துணை செயலாளர் ஆதிமூலம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் காந்தி மற்றும் மகாலிங்கம், குமார், ராகவேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...