வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....
மகாத்மா காந்தியின் வாழ்க்கை துணைவியார் கஸ்தூரிபா காந்தி...பிறந்த தினம் இன்று.
(1869)
இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார்.
திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் காந்தி கல்வி கற்பித்தார்
காந்தி விடுதலைப் போரில் களம் இறங்கியபோது. கஸ்தூரிபாவும் அந்தப் போராட்டங்களில் உடன் இறங்கியதுடன் ஏராளமான பெண்களை விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்தார்.
தனது கணவருக்கு அவருடைய அனைத்துப் பணிகளிலும் உதவியாக இருந்தார் சபர்மதி எனும் இடத்தில் காந்தி ஆசிரமத்தை ஆரம்பித்தார்.
இந்த ஆசிரமத்தின் முதல் உறுப்பினர் கஸ்தூரிபா. எளிமையான உணவு, உடை, ஆசிரம வாழ்க்கை என எல்லாவற்றிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
1932ஆம் ஆண்டு சத்தியாகிரக இயக்கத்தில் கஸ்தூரிபா பங்கு பெற்றார்.
அதனால் 6 வாரம் சிறை சென்றார். அதுபோல் காந்தி அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் சேர்ந்து போராடினார்.
சிறையும் சென்றார்.
1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியும் கஸ்தூரிபாவும் கைது செய்யப்பட்டு புனேவிலுள்ள
ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர்.
1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு காந்தியின் மடியில் தலைவைத்தபடி படுத்திருந்த கஸ்தூரிபாய் காலமானார்.
கணவரின் வாழ்க்கையே தன் வாழ்க்கையாக வாழ்ந்தவர் கஸ்தூர்பா.
*எப்போதும் காந்தியின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போய் கணவரின் நிழலாக வாழ்ந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...