பட்டம் விட்ட சிறுவர்கள் காவலர் கழுத்தை பதம் பார்த்த நூல் போலிசார் விசாரணை...
வேலூர் ஊரீஸ் கல்லூரி அருகே அப்பகுதி சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் . அப்போது பட்டம் விடும் மாஞ்சா நூல் தொங்கியிருந்த நிலையில் அவ்வழியாக வேலூர் மத்திய சிறை பாதுகாவலராக பணியாற்றும் சுரேஷ் பாபு (36) என்பவர் பணியை முடித்துவிட்டு காட்பாடி அடுத்து சேனூர் பகுதிக்கு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது அப்போது அங்கு தொங்கிக் கொண்டிருந்த மாஞ்சா நூலில் அவருடைய கழுத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பட்டம் விட்டவர்களை யார் என்று தேடி வருகின்றனர்.
பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...