கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கௌரவப்படுத்தும் வகையில் நகை தொழிலாளி ஆம்பூரில் அசத்தல்...
உலகம் முழுவதும் தனது அசுர பலத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸ். இந்தியாவிலும் தனது ஆதிக்க சக்தியின் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக இரவு பகல் என்று பாராமல் மக்களுக்காக உழைத்து கொண்டு இருக்கும் காவல்துறை, துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்களை பாராட்டும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நகை தொழிலாளி தேவன் என்பவர் 1.900 கிரமில் தங்கத்தாலான கோவிட் 19, போலீஸ் லத்தி , தொப்பி, துடைப்பம் , ஸ்டெதாஸ்கோப் முகக்கவசம் ,மைக் உள்ளிட்டவைகளை செய்து மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு பல்வேறு சாதனைகளை தனது தொழில் மூலம் செய்துள்ளார். குறிப்பாக தனது கைவண்ணத்தில் உலக கோப்பை கிரிக்கெட் மைதானம், தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருவிழா, இஸ்லாமிய திருவிழா ரம்ஜான், கிருஸ்துவ திருவிழா கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் மற்றும் தனது கைவண்ணத்தில் பெண்கள், அவர் அணியும் காலணிகள், புடவை போன்றவை தங்க நகைகளில் வடிவமைத்து பல்வேறு சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...