*இன்றைய (22-04-2020) ராசி பலன்கள்*
மேஷம்
வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். எண்ணிய செயல்கள் பெரியோர்களின் ஆதரவால் தடையின்றி முடியும். அலைச்சல் சம்பந்தமான பணிகளால் சோர்வு உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : மதிப்பு உயரும்.
பரணி : சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். அஞ்ஞான எண்ணங்களால் மனம் சஞ்சலத்துடன் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : உறவுகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : நினைவாற்றல் மேலோங்கும்.
---------------------------------------
மிதுனம்
நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
கடகம்
போட்டிகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பதற்றமின்றி நிதானத்துடன் உயர் அதிகாரிகளிடம் பேசவும். மாணவர்களின் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சிறு பிரச்சனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : பிரச்சனைகள் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
மனைவிவழி உறவுகளால் சுபச்செய்திகள் உண்டாகும். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : சுபமான நாள்.
பூரம் : சூட்சமங்களை கற்பீர்கள்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------
கன்னி
மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மனை சம்பந்தமான பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
துலாம்
விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். எதிர்பாராத சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.
---------------------------------------
விருச்சிகம்
நண்பர்களிடம் பேசும் போது கனிவுடன் பேசவும். புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமைகள் உண்டாகும். விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : கனிவுடன் பேசுவும்.
அனுஷம் : பெருமைகள் உண்டாகும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் ஏற்படும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : உறவுகள் மேம்படும்.
---------------------------------------
மகரம்
தாய்வழி உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது சற்று கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : தேவைகள் நிறைவேறும்.
அவிட்டம் : தேடல் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : நம்பிக்கை மேலோங்கும்.
---------------------------------------
மீனம்
செய்தொழிலில் முன்னேற்றம் சம்பந்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய தொழில் செய்வதற்கான சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.
ரேவதி : பதற்றமான நாள்.
--------------------------------
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்...