பாமக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்.ஆய்வாளர் இடம் மாற்றம். ஆனால் இதற்கு இது தீர்வு அல்ல......
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸை தடுக்க பணியில் அந்த அந்த மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித் இப்படி பல துறைகள் தங்களின் சிறப்பான பணியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல ஒரு நற்பெயர் பெற்று வரும் வேலையில்... விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் சுதாகர் என்பவர் ஒரு இளைஞரை பிடித்த இரவு நேரத்தில் கொலைவெறியுடன் கொடுரமாக தாக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்னதான் நடத்த என்று விசாரணை மேற்கொண்டதில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மூங்கில் பாடி பகுதியைச் சேர்ந்தவர் பா.ம.க வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் இவர் பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்தாலும்.. தங்கள் பகுதியில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கும் குணம் கொண்ட நபர் என்று அனைவராலும் கூறப்படுகிறது. இந்நிலையில் சின்ன சேலம் காவல் ஆய்வாளர் சுகாதர் மீது பல்வேறு குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தநிலையில் குறிப்பாக கள்ளச்சாராயம், மணல் கடத்தல், பாமகவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவது என தனது பதவியை வைத்து சிறிய ராஜ்ஜியம் நடத்தி வந்துள்ளார். இதை தட்டிக்கேட்கும் எண்ணத்தில் சக்திவேல் காவல் ஆய்வாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். அதன்பின் தனது சமூக வலைத்தளத்தில் காவல் ஆய்வாளர் பற்றிய சிறிய தொகுப்பை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சக்திவேல்...
10-ம் தேதி இரவு 9:00 மணிக்கு, ``சின்னசேலம் வடக்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களைப் பொய் வழக்குகள் மூலமாக இனி தொட வேண்டும் என்று நினைத்தால், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக என் கட்சியின் தொண்டர்களுக்கும் என் சமுதாய மக்களுக்காகவும் என் உயிரை விடவும் தயங்க மாட்டேன். என்பதை சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுகாதர் அவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என பதிவு செய்துள்ளார். இதை அறிந்த சின்ன சேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் இரு தினங்களுக்கு முன்பு ( 10-04-2020)
அன்று இரவு 9:45 மணிக்கு, மது போதையில் இருந்த காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் 6 காவலர்களுடன் மூங்கில்பாடி கிராமத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை ஆஃப் செய்துவிட்டு ஆய்வாளர் சக்திவேல் வீட்டிற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். அப்போது சக்திவேல் எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை. குறிப்பாக அவரது அப்பா, அம்மா அவருடைய காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்கள். அவர்களை ஒருமையில் பேசியதோடு அவர்களை எட்டி உதைத்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் காவல் ஆய்வாளர் சக்திவேலை கொலைவெறியுடன் தாக்கும் காட்சிகளை தங்களின் செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். பிறகு சக்திவேலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பாமக தலைவர்களையும் சக்திவேலையும் அவதூறாக பேசி தாங்கள் பாணியில் அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பாமகவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் சக்திவேலை காவல்நிலையத்தில் இருந்து விடுதலை செய்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் ஆய்வாளர் சுதாகர் மீது உயர் அதிகாரிகளிடம் பாமகவினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஆய்வாளர் சுதாகர் ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்யபட்டுள்ளார். பாமக பிரமுகர் ஒருவரின் வீடு தேடி போய் கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆய்வாளரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒருவர் தவறு செய்தால் சட்டத்தால் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் தவிர தன் அதிகாரத்தை கையில் எடுத்தால் இப்படித்தான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்பது இந்த சம்பவம் ஒரு சான்று...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...