காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கையொட்டி அதிமுக சார்பில் உதவிகள்..
கொரோனா நோய்தொற்று காரணமாக தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சியில்
அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ் பாஷா தலைமையில் அரிசி மற்றும் காய்கறிகள், முக கவசங்களை சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.
அதிமுக காஞ்சிபுரம் மத்திய (செங்கல்பட்டு) மாவட்ட காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தின் சார்பில் செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாரதபுரத்தில் சுமார் 150 தொழுநோயாளிகளுக்கும், பெத்தேல் நகரில் 200 குடும்பங்களுக்கு காஞ்சி மத்திய (செங்கல்பட்டு) மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் அறிவுறுத்தலின்படி காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ் பாஷா தலைமையில் ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக ஊராட்சி செயலாளருமான சல்குரு, காட்டாங்குளத்தூர் ஒன்றிய பொருளாலர் பலராமன் முன்னிலையில் 5கிலோ அரிசி மற்றும் காய்கறிகள், முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்கள்.
இதனையடுத்து ஒழுலூர் ஊராட்சியில் இருளர் குடும்பம் 15, லண்டர் 25, மற்றும் தூய்மை பணியாளர்கள் 10 பேருக்கும் ஒழலூர் ஊராட்சி செயலாளர் சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பெரியபுத்தேரி ஊராட்சிக்குட்பட்ட சென்னேரி இருளர் 100 குடும்பங்களுக்கு பெரியபுத்தேரி ஊராட்சி செயலாளர் கேசவன் முன்னிலையில் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வகுமார், சிவராமன், பானுப்பிரியா சரவணன், அதிமுக நிர்வாகிகள் என்ஆர்வி.சங்கர், உமாபதி, கொண்டை வேலு, பாலு, வழக்கறிஞர் சிகே.பெருமாள், மற்றும் ஒப்பந்தக்காரர் சென்னேரி கோபி, சந்திரன், கிருஷ்ணசாமி, வெங்கடேசன், துலுக்கானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- உத்தமன்...