ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு   திமுக பெண் பிரமுகர் உதவி...

ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு   திமுக பெண் பிரமுகர் உதவி...


கொரோனா வைரஸ் என்ற  சொல்   அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தங்களை  வல்லரசு நாடுகள் என்று மார்தட்டிக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, போன்ற நாடுகளையும் வீட்டு வைக்கவில்லை இந்த கொடிய வைரசயான கொரோனா வைரஸ். தற்போது இந்தியாவிலும் தனது ஆதிக்க சக்தியின் மூலம் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் வேலையில் அதனை கட்டுபடுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், ஊராட்சி பணியாளர்களுக்கு  திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி தனது சொந்த செலவில்  கொரோனா நிவாரண நிதியாக  அரிசி சிப்பம்,  சமையலுக்கு தேவையான உணவு பொருட்கள், முக கவசங்கள், கிருமி நாசினி, கையுறைகள் உட்பட  1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார். இவர் ஏற்கனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image