வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...தேசிய குடிமை பணிகள் தினம் Indian Civil Services day என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் தேதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது
*சிவில் சேவை தினம்*
மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது .
சிவில் சேவையானது நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் முதுகெலும்பாக செயல்படுகிறது .
இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மூலம் நிர்வாகத்தை இயக்க வேண்டியுள்ளது .
அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டிய கடமை இந்திய ஆட்சிப் பணிக்கு (Civil Service) உள்ளது .
இந்தியாவின் உள்நாட்டு சேவையானது பிரிட்டிஷ் அரசு கடைபிடித்த ஆட்சிப்பணி முறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது .
*1947 ஆம் ஆண்டிற்குப் பிறகே உருவாக்கப்பட்டு உள்நாட்டு சேவைகளின் பொறுப்பை இந்திய நிர்வாகம் இயக்கி வருகிறது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை காண்க...