ஆம்பூரில் கை ரிக்ஷா தொழிலாளியின் மக்கள் சேவை பாராட்டுவோம் வாங்க....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாவட்டம் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி சென்று வந்த 7பேருக்கு கொரோனா வைர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு ஜலால் பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர் கை ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி நிசார் அகமது இவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து தான் வைத்திருக்கும் கை ரிக்சாவில் 2கேன்கள் பொருத்தி அதில் மின்மோட்டார் ஒன்றை பொருத்திக் கொண்டு மின்சார வசதிக்காக சுவிட்ச் பாக்ஸ் ஒன்றைத்தயார் செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் வீதி வீதியாக சென்று தனது சேவை பணியை செய்து வருகிறார். தான் வறுமையில் இருந்தாலும் தான் சார்ந்துள்ள பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு வரும். வாங்க இந்த ரிக்ஷா தொழிலாளியின் சேவை நாமும் பாராட்டுவோம்....
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்..