ஆம்பூர் அருகே காப்புக் காடுகள் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து..

ஆம்பூர் அருகே காப்புக் காடுகள் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து..



ஆம்பூர் வனச்சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் அண்மைக்காலமாக சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பல்வேறு நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் , மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் காப்பு காடுகள் வழியே பலர் பயணிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



நெடுஞ்சாலைகளில் மக்கள் பயணிக்க போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி பயணித்தால் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு உள்ளான பொதுமக்கள் காப்பு காடுகள் வழியே இப்போது பயணிக்கத் தொடங்கினர். பொதுமக்கள் செல்லும் பாதையில் கள்ளச்சாராயம் அருந்த செல்வோரும் பயணிக்கத் தொடங்கினர். இது வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில் இன்று ஆம்பூர் வனத்துறையினர் வன சரக அலுவலர் மூர்த்தி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஜம்பூட்டல் , தூருசந்து , வால்பாறை , புலிகுண்டு , பிக்கலமலை , கொண்டப்பட்டியான் சுனை , துருஞ்சித்தளை மேடு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்."வனத்துறையினர் அனுமதி இல்லாமல் யாரும் காப்புக் காடுகள் பகுதிகளில் நடமாடக் கூடாது" என்று கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image