ஜோலார்பேட்டையில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருவண்ணாமலை எம்பி...
கொடிய வைரஸ் கொரோனா வைரஸ் தடுப்பு பணியின் காரணமாக மக்கள் தங்களின் வேலைகளை இழுத்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஒரு அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனது பங்கிற்காக அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்
திருப்பத்தூர் மாவட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை பகுதிகளில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ள கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக 15 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள், அடங்கிய தொகுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். உடன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், முன்னாள் பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி,மாவட்ட துணைச்செயலாளர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் அன்பழகன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...