திருப்பத்தூரில் அமமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நகர செயலாளர் அட்சயா முருகன் வழங்கினார்...
சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் தனது அசுர பலத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸ். இதை தடுக்கும் பணியில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் கொரோனா தாக்கம் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பதால் பாதிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கை ஆகும். தமிழ் நாட்டில் இந்த கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அஃதே போல் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் ஆரிப் நகர், கோட்டை தெரு போன்ற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர செயலாளர் அட்சயா முருகன் தலைமையில் அரிசி, பருப்பு, காய்கறிகள், மற்றும் மாளிகை பொருட்களை 100 நபர்களுக்கு வழங்கினார். இதில் நகர பொருளாளர் சரவணன், இணைச்செயலாளர் அக்ரம், மாவட்ட துணை செயலாளர் நசிமா கால்பாய்,நகர இலக்கிய அணி செயலாளர் முகமது சித்திக், பாசறை செயலாளர் பைரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...