நடிகையின் மகன் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி போலிசார் விசாரணை...
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக மதுபானம் கிடைக்காமல் குடிநோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ஒரு கட்டத்தில், மதுவுக்கு அடிமையான சிலர் விபரீத முடிவுகளை எடுக்க உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. குடிநோயாளிகள் மதுக்கடையில் திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இந் நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாட்களாக மதுவுக்கு அடிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபானம் கிடைக்காமல் விரக்தியடைந்து, அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பூபதி சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்....