நேர்த்தி  கடனுக்காக வைத்துயிருந்த பணத்தில் தனது  மாணவர்களுக்கு உதவி செய்த ஆசிரியர்கள்...

நேர்த்தி  கடனுக்காக வைத்துயிருந்த பணத்தில் தனது  மாணவர்களுக்கு உதவி செய்த ஆசிரியர்கள்...


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம்  செல்லரப்பட்டி பகுதியில் இயக்கும் ஒன்றிய   நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக        பணியாற்றி வருபவர் கற்பகவல்லி.. இவரது  கணவர் மணிமாறன்  திருப்பத்தூர் அடுத்த  கொடுமாம்பள்ளி பகுதியில் உள்ள  அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தங்கள்  வீடுகளில் முடங்கி கிடக்கும் ஒரு அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மணிமாறன் தம்பதியர்கள்  தங்களிடம் படிக்கும் ஏழை  மாணவர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் தங்கள் குடும்பத்தின் சார்பில் ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள  திருப்பதி கோவிலுக்கு பிராத்தனைக்காக உண்டியலில் பணம் சேர்த்து வைத்துயிருந்த பணத்தை தங்களிடம் படிக்கும்  ஏழை மாணவர்கள்   மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உட்பட 40 பேர்களுக்கு தலா 1000 ரூபாய் என்ற வீதத்தில் 40000 ரூபாய் என வழங்கியுள்ளார்.  கடவுளுக்கு செலுத்த வேண்டிய உண்டியல் பணத்தில் ஏழை மாணவர்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு  உதவி செய்த இரு அரசு பள்ளி ஆசிரியர்களின் செயல் பாராட்டிற்கு உரியதாகும்..


ஏழை குடும்பங்களுக்கு செய்யும் உதவி அந்த கடவுளுக்கே  நேராக  செய்யும் பெரிய சேவை ஆகும்  என்பதனை இவர்கள் உணர்த்தி உள்ளனர்...


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image