நாட்றம்பள்ளி அருகே சுடுகாடு பிரச்சினை  சடலத்தை வைத்து போராட்டம். போலிசார் விசாரணை...

நாட்றம்பள்ளி அருகே சுடுகாடு பிரச்சினை  சடலத்தை வைத்து போராட்டம். போலிசார் விசாரணை...


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள  வெலக்கல் நத்தம் அடுத்த   குனிச்சியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் குமரேசன் மாற்றுத்திறனாளி (28) என்பவர் நீண்ட நாட்களாக  உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று இரவு தீடீரென  இறந்துள்ளார். இந்நிலையில்  குனிச்சியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக  அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.  இந்த நிலையில் தீடீரென  சென்னாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன்,சேகர், சசிகலா குமார் பிரபாகரன்  உள்ளிட்ட  நபர்கள் இந்த இடம் எங்களுக்கு  சொந்தமான இடம் என கூறி சடலத்தை புதைக்கவிடாமல் தடுத்து உள்ளனர். இதனையடுத்து  சுடுகாட்டில் சடலத்தை வைத்து குனிச்சியூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலிசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இரு தரப்பு இடம் சுமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சுடுகாடு பிரச்சினை காரணமாக அப்பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image