திருப்பத்தூர் அருகே மாணவர்களின் மனமறிந்து உதவி செய்த தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்...

மாணவர்களின் மனமறிந்து உதவி செய்த தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்...


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் கும்பிடிக்கம்பட்டி ஊராட்சி முத்தம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் 25 மாணவர்களின்  நலன் கருதி தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் நலன் கருத்தில் கொண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர்  கண்ணகிமணி என்பவர் அவர்களின் தற்போதைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி (தலா ஒரு சிப்பம்)  காய்கறிகள், மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  கந்திலி சுற்றுவட்டார கல்வி அலுவலர் சித்திரா தலைமையில் வழங்கபட்டது. இதில் கந்திலி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், பாமக ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆதிமூலம்,  மற்றும் சாமிக்கண்ணு உட்பட  பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் சமூக இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது கை கழுவும் முறை மற்றும் முக கவசங்கள், கிருமி நாசினி போன்றவை வழங்கி உரிய ஆலோசனை வழங்கபட்டது. தன்னிடம் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சரியான நேரத்தில் உதவி கரம் கொடுத்த செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image