பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு உதவி கரம் கொடுத்த தலைமை ஆசிரியர்...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருத்தில் கொண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா முருகன் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மாளிகை பொருட்கள், பிஸ்கட் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் குமார், வட்டார கல்வி அலுவலர் கோமதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஆசிரியர் உஷா மற்றும் சமூக ஆர்வலர் அட்சயா முருகன், ஊர் பெரியவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.. குறிப்பாக பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளி, மற்றும் முக கவசங்களை அணிந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...