திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கபசுர குடிநீர் வழங்கிய காவல் ஆய்வாளர்..
உலகம் முழுவதும் தனது அசுர பலத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொடிய வைரசயான கொரோனா வைரஸ் ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மிக பெரிய நாடாக நமது பாரத தேசம் உள்ளது. இந்த கொடிய வைரஸ் காய்ச்சலுக்கு நமது பாரத தேசத்தில் பல்வேறு பேர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை பாதுகாக்கவும் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் ப.முத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திப்பசாமுத்திரம், அண்டிவட்டம், போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் மற்றும் சமூக ஆர்வலர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கிராமிய காவல் துறை ஆய்வாளர் மதன லோகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...