கொரோனா  நிதியாக  ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு  வழங்கிய டாடா நிறுவனம்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  நன்றி....

கொரோனா  நிதியாக  ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு  வழங்கிய டாடா நிறுவனம்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  நன்றி....


தமிழகத்தில் கொரோனா நிவாரண நடவடிக்கைக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான பங்கை வகிப்பது பிசிஆர் எனப்படும்   ஆய்வுக்கருவியாகும். இதன் மூலம் கொரோனா வைரஸ்  தொற்று உறுதியானவர்களைச் சோதிக்க முடியும். முக்கியமான இந்த ஆய்வுக் கருவி தமிழக அரசிடம் 24,000 மட்டுமே உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி
ரேபிட் கிட்ஸ் மூலமாக பரவலாக பரிசோதனை செய்ய முடியும் என்கிற நிலையில் ரேபிட் கிட்ஸ் வரவில்லை. இதனால் பிசிஆர் ஆய்வுக்கருவிகளே சோதனைக்குப் பயன்படுகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனமான  டாடா நிறுவனம் தமிழகத்திற்கு  40,032 பிசிஆர் ஆய்வுக்கருவிகளை வழங்கியுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்...


தமிழக அரசு, கொரோனா  வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் துரிதமாக  எடுத்து வருகிறது. தமிழக  அரசுக்கு தோள் கொடுக்கும் வகையில்  பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு  அமைப்புகள், பள்ளி மாணவர்கள் என  கொரோனா வைரஸ் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன.


மேலும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களைக் கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான கருவிகளையும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது டாடா நிறுவனம், கொரோனா  தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக, சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.


இச்சூழ்நிலையில் டாடா நிறுவனம் செய்த இந்த உதவிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பாக தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்... இந்திய நிறுவனமான டாடா நிறுவனம் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 1500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.. எனது நாட்டு மக்களுக்காக சேவை செய்ய எப்போதும்  டாடா நிறுவனம் துணை இருக்கும் என்று அதன் நிறுவனர் ரத்தன் டாடா  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image