திருப்பத்தூர் அம்மா உணவகத்தில் முட்டையுடன் வழங்கப்படும் உணவு பொதுமக்கள் மகிழ்ச்சி...
திரு என்றால் சிவன் என்று அர்த்தம். 10 சிவன் திருத்தலங்களை கொண்டுள்ளதால் மன்னர் ஆட்சி காலத்தில் திருபுவனம் என்று அழைக்கப்பட்ட ஊர் திருப்பத்தூர் ஆகும். தற்போது கொடிய வைரசயான கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை சிறப்பாக ஏற்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இவர்கள் இருவரையும் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பாராட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் நகரில் ஆதரவற்ற மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் இயக்கும் அம்மா உணவகத்தில் இந்த முழு ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இலவசமாக உணவு வழங்க தமிழக அமைச்சர் வீரமணி அதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உணவுடன் முட்டை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த அம்மா உணவகத்தில் நாள்தோறும் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு முட்டையுடன் உணவு வழங்கப்படுகிறது. இதனால் ஆதரவற்றவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட பலர் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...