திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறக்கட்டளை மூலம் உதவிக்கரம் நீட்டிய திமுக நிர்வாகிகள்..
உலகம் முழுவதும் தனது கொடிய அசுர சக்தியால் நாளுக்கு நாள் உயிர் பலிகளை வாங்கி வரும் கொடிய வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும். இந்தியாவிலும் தனது அசுர பலத்தால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் செயல்படும் முன்னாள் திருப்பத்தூர் சேர்மன் அண்ணாதுரை பெயரில் சேர்மன் அண்ணாதுரை நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் அருணா, அருணகிரி மற்றும் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி இவரும் இணைந்து திருப்பத்தூர் நகரில் பயணிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 நபர்களுக்கு தங்கள் அறக்கட்டளை மூலம் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை இலவசமாக வழங்கினார். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களின் நலன் கருதி சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் முக கவசங்களை வழங்கிய அவர்களின் வாழ்வில் தற்பொழுது விளக்கேற்றிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...