திருப்பத்தூரில் தனது மகன் பிறந்த நாளை முன்னிட்டு இலவசமாக   காய்கறிகளை ஒவ்வொரு  வீடுகளுக்கே தானே  சென்று வழங்கிய தொழிலதிபரும் பாமக மாநில இளைஞரணி அமைப்பு துணை செயலாளர் ஏ.பி.சிவா...

திருப்பத்தூரில் தனது மகன் பிறந்த நாளை முன்னிட்டு  காய்கறிகளை ஒவ்வொரு  வீடுகளுக்கே தானே  சென்று இலவசமாக வழங்கிய தொழிலதிபரும் பாமக மாநில இளைஞரணி அமைப்பு துணை செயலாளர் ஏ.பி.சிவா...


தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக பொதுமக்கள் தாங்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பு துணை செயலாளர் ஏ.பி.சிவா பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார். கடந்த மாதம் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக அனேரி கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் தனது மகன் சுஜிவந்த் இரண்டாம் ஆண்டு  பிறந்தநாளை முன்னிட்டு தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்  தான் பிறந்த ஊரான அனேரி கிராமத்திற்கு உட்பட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு  சமையல் செய்ய தேவையான வெங்காயம், பூண்டு,தக்காளி, முள்ளங்கி, கேரட், உட்பட  5 கிலோ காய்கறிகள் கொண்ட  பொருட்களை இலவசமாக   ஒவ்வொரு வீடுகளுக்கும் தன் மகனுடன் சென்று வழங்கி ஆசிர்வாதம் பெற்றார்.. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு சமூக பணிகள் செய்து வரும் ஏ.பி.சிவா அவர்களின் இந்த சமூக சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


 


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image