அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சார்பில் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த தெரு கூத்து நிகழ்ச்சி..  

அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சார்பில் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த தெரு கூத்து நிகழ்ச்சி..


 


கொரோனா நோய் தொற்று  தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்துள்ள சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ்பாஷா ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு தெரு கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் எஸ்.குமரவேல் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்ற  இந்த தெரு கூத்து நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும் தனித்திரு விலகியிரு வீட்டில் இரு என அறிவுறுத்தியும் கலை நிகழ்ச்சியினர் ஆடி பாடியும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர் போல் வேடமணிந்தும். நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முகக் கவசங்கள் அணிந்தும் நிகழ்ச்சியை  பார்வையிட்டனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரமின்றி தவித்த 37 ஆட்டோ ஒட்டுநர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை அதிமுக சார்பில்  வழங்கினர். இதில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய பொருளாலர் பலராமன், எஸ்.பி.ரவி.சந்திரன் உட்பட அதிமுகவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்..


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image