சோழிங்கநல்லூர் அருகே கொரோனா பாதுகாப்பு ஊரடங்கையொட்டி 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்-தொழிலதிபர் ராஜ் குமார் வழங்கினார்..

சோழிங்கநல்லூர் அருகே கொரோனா பாதுகாப்பு ஊரடங்கையொட்டி 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்-தொழிலதிபர் ராஜ் குமார் வழங்கினார்..


செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் 
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவையொட்டி  பெரும்பாக்கம் ராஜசேகர் மற்றும் ரங்கராஜன் (எ) பாலு ஆலோசனைப்படி   பெரும்பாக்கம் தொழிலதிபர் எஸ்.ராஜ்குமார் ஏற்பாட்டில்  பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கும், வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரியும் ஏழை பணியாளர்களுக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் பணியாளர்களுக்ககு காய்கறிகள் மற்றும் தலா 5  கிலோ அரிசி வீதம் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். 


இந்த கொரோனா பாதிப்பால் தொடர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் உதவி செய்த பெரும்பாக்கம் ராஜ்குமாருக்கு பொது மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு பொது மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். மேலும் இவரது 2- வது மகள் ஆதினி 
தான் சிறுக சிறுக சேமித்து வைத்த 16.260 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக கடந்த 16-04-2020 அன்று தனது பெற்றோருடன் சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image